‘ஒரு குடும்பத்தை காட்டு.. அதுவரை இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்’ ஆ.ராசா பரபரப்பு பேச்சு!
‘சாதி ஒழிப்பில் அக்கறை உள்ள இரண்டு தலைவர்களையும் கொண்டுள்ள ஒரே குடும்பம் கலைஞரின் குடும்பம். அவராக இருந்தாலும், அவரது மகனாக இருந்தாலும், அவரது பேரனாக இருந்தாலும் அம்பேத்கர் பெரியார் தத்துவத்தை தாங்கி நிற்கும் ஒரு காரணத்திற்காகத்தான், இந்த குடும்ப அரசியல் எல்லாம் இங்கு ஈடுபடுகிறது’
‘திராவிட முன்னேற்றக் கழகம் சாதி ஒழிப்புக்கான இயக்கம். அம்பேத்கரை கொண்டாடுவதற்கான தகுதி உள்ள இயக்கம் திராவிட இயக்கம் மட்டும்தான். அம்பேத்கர் பெரியார் தத்துவத்தை தாங்கி நிற்கும் ஒரு குடும்பமாக இருப்பதனால் தான் இங்கு குடும்ப அரசியல் எடுபடுகிறது. சாதி ஒழிப்பதற்காக ஒரு குடும்பத்தை விரும்புகிறோம் அதுபோல் ஒரு குடும்பம் இருந்தால் காட்டுங்கள், அதுவரைக்கும் இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்,’ என்று, பெரம்பலூரில் நடந்த திமுக நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசியுள்ளார்.
ஒரே இயக்கம் திராவிட இயக்கம் தான்
பெரம்பலூரில் திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழுவின் திருச்சி மண்டல அளவிலான ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் பெரம்பலூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில ஆதிராவிட நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவாணன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திமுக எம்பி ஆ ராசா பேசியதாவது:
‘‘திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சாதி ஒழிப்பிற்கான ஒரு இயக்கம். அதை செய்துவிட்டோமா என்று தெரியவில்லை. மூவாயிரம் ஆண்டுகளாக சாதிகள் இருக்கிறது. அது ஒரு சுவர் அல்ல உடைப்பதற்கு. சாதி என்பது மூளைக்குள் இருக்கும் ஒரு வன்மம், ஜாதி என்பது ஒரு பொய், அந்த சாதி ஒழிப்பிற்கான இயக்கம் அம்பேத்கரும் பெரியாரும் வைத்திருந்தார்கள். அம்பேத்கரை கொண்டாடுவதற்கான ஒரே தகுதி உள்ள இயக்கம் திராவிட இயக்கம் மட்டும் தான்.
இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்
சாதி ஒழிப்பில் அக்கறை உள்ள இரண்டு தலைவர்களையும் கொண்டுள்ள ஒரே குடும்பம் கலைஞரின் குடும்பம். அவராக இருந்தாலும், அவரது மகனாக இருந்தாலும், அவரது பேரனாக இருந்தாலும் அம்பேத்கர், பெரியார் தத்துவத்தை தாங்கி நிற்கும் ஒரு காரணத்திற்காகத்தான், இந்த குடும்ப அரசியல் எல்லாம் இங்கு ஈடுபடுகிறது.
நாங்கள் சாதி ஒழிக்கணும் என்று ஒரு குடும்பத்தை விரும்புகிறோம், நாங்கள் பாரபட்சம் பார்க்காமல் இருக்கும் ஒரு குடும்பத்தை விரும்புகிறோம், அதுபோல தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் இருந்தால் காட்டு, அதுவரைக்கும் இந்த குடும்பம் தான் ஆட்சி செய்யும்,’’ என்று ஆ.ராசா கூறினார்.
டாபிக்ஸ்