தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Joemichel : யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அப்சரா வழக்கு - ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோட் உத்தரவு!

JoeMichel : யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அப்சரா வழக்கு - ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோட் உத்தரவு!

Divya Sekar HT Tamil
Jan 13, 2024 10:47 AM IST

அதிமுக செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு யூடியூபர் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அப்சரா வழக்கு
யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அப்சரா வழக்கு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்சராவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. யூடியூபில் கருத்துகளை வெளியிட உரிமை உள்ளது என்றாலும் தனிப்பட்ட நபரின் உரிமையில் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

யூடியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூடியூபர் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது என்று அப்சரா ரெட்டி புகார் தெரிவித்திருந்தார். அப்சரா ரெட்டிக்கு எதிரான வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்