அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

Kathiravan V HT Tamil
Published May 17, 2025 09:22 AM IST

”இந்த சோதனை சேவூர் ராமச்சந்திரனின் வீடு மட்டுமின்றி, அவரது மகனின் வீட்டிலும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன”

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சேவூர் ஊராட்சியில் உள்ள முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை சேவூர் ராமச்சந்திரனின் வீடு மட்டுமின்றி, அவரது மகனின் வீட்டிலும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேவூர் ராமச்சந்திரன், 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் வெற்றி பெற்று, இந்து அறநிலையத் துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தவர். மேலும், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று, தற்போது ஆரணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.