தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Another Elephant Electrocuted To Death In Coimbatore

Elephant Death: கோவையில் மின்கம்பம் சாய்ந்து யானை பரிதாப பலி!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 25, 2023 01:27 PM IST

மின்சார வாரிய சிமெண்ட் கம்பம் உடைந்து, மின் கம்பம் மற்றும் கம்பி யானை மீது விழுந்து யானை பரிதாப பலி

மின்கம்பம் சாய்ந்து உயிரிழந்த யானை
மின்கம்பம் சாய்ந்து உயிரிழந்த யானை

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை பெரியநாயக்கன்பாளையம், வனச்சரகம், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு, நாயக்கன் பாளையம் தெற்கு சுற்று, தடாகம் காப்புக் காட்டிற்கு வெளியே வெளியே, சுமார் 1 கி.மீ. தொலைவில், இன்று 25.03.2023 அதிகாலையில் , பூச்சியூர் குறுவம்மா கோவில் பகுதிக்கு அருகில் உள்ள பட்டா நிலத்தில், யானை ஒன்று சென்றது. அப்போது அங்குள்ள மின் வாரிய மின் கம்பி விநியோக சிமெண்ட் போஸ்ட் மீது அந்த நடுத்தர வயது ஆண் யானை உடலை தேய்தது. இதில் மின்சார வாரிய சிமெண்ட் கம்பம் உடைந்து, மின் கம்பம் மற்றும் கம்பி யானை மீது விழுந்தது. இதில் நடுத்தர வயதுடைய அந்த ஆண் யானை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. யானை இறந்த இடம் வனப்பகுதிக்கு வெளியே சுமார் 1கி.மீ தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலம் ஆகும்.

இதையடுத்து உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் வனக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்த யானை பிரேத பரிசோதனை செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தர்மபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பரிதாபமாக உயிரழந்தன. அந்த துயர சம்பவமே இன்னும் நீங்காத நிலையில் கோவையில் மீண்டும் ஒரு யானை மின்கம்பம் விழுந்தும், மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளது பொதுமக்களிடமும், வன ஆர்வலர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் கடந்த சில தினங்களுக்க முன் தர்மபுரி வழியாக கம்பைநல்லூர் பகுதிக்கு வந்த காட்டு யானை களவல்லி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு வழியாக சென்றது. இதனைப் பார்த்த ஊர் மக்கள் எல்லா திரண்டனர். அந்த நேரத்தில் யானை விவசாய நிலத்திலிருந்து ஏரிக்கரையின் மீது ஏறும்போது தாழ்வாக இருந்த மின் கம்பியில் உரசி இருக்கிறது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு இருக்கின்றனர். ஆனால் யானை எந்த சத்தத்தையும் கேட்காமல் சென்றதால் மின்சாரம் உடலில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தொடர்ந்து மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பது தொடர்கதையாகி வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்