SabariMala: சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sabarimala: சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

SabariMala: சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Marimuthu M HT Tamil
Nov 19, 2023 05:42 PM IST

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SabariMala: சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
SabariMala: சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

இந்தாண்டு தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதமானது ஆங்கிலத் தேதிக்கு நவம்பர் 17ஆம் தேதி பிறந்தது. இதனை ஒட்டி, சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலின் நடையானது அதே தேதியில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஐயப்பனுக்கு விரதம் இருந்து கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அதன்படி, பேருந்து மற்றும் ரயில்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு இன்று முதல் 7 ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, இன்று(நவம்பர் 19), நவம்பர் 26, டிசம்பர் 3, டிசம்பர் 10, டிசம்பர் 17, டிசம்பர் 24, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில், ஸ்பெஷல் ரயில்கள் இரவு 11:30 மணிக்கு, சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பி அடுத்தநாள் நண்பகல் 1:10 மணிக்கு கோட்டயம் சென்றடையும். அதேபோல், மறுமார்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10:30 மணிக்கு சென்னை வந்தடையும். அந்த மறுமார்க்க ரயில்கள் முறையே நவம்பர் 20ஆம் தேதி, நவம்பர் 27ஆம் தேதி, டிசம்பர் 4ஆம் தேதி, டிசம்பர் 11ஆம் தேதி, நவம்பர் 18ஆம் தேதி, நவம்பர் 25ஆம் தேதி, ஜனவரி 1ஆம் தேதி கோட்டயத்தில் இருந்து சென்னைக்கு ஸ்பெஷல் ரயில்கள் புறப்படுகின்றன. இதற்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது.

இந்த ஸ்பெஷல் ரயில்கள் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர் மார்க்கமாக சென்னையில் இருந்து கோட்டயம் சென்றடைகின்றன. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.