Padma Awards 2023: 6 தமிழர்கள் உட்பட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!
இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த இவர்கள், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதிக விஷமிக்க பாம்புகளை பிடித்துள்ளனர்.
குடியரசு தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் மத்திய அரசின் உயரிய விருதான பத்மவிருதுகள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தமிழகத்தை சேர்ந்த இருளர் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த இவர்கள், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதிக விஷமிக்க பாம்புகளை பிடித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
மேலும் தமிழகத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருதும், பரதநாட்டிய கலைஞர் கல்யாண சுந்தரம் பிள்ளை, சமூகசேவை பிரிவில் பாலம் கல்யாண சுந்தரம் மற்றும் மருத்துவத்துறை சேவைக்காக கோபாலகிருஷ்ணன் வேலுசாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகள் அறிவிக்கப்பட்டது குறித்து, மாசி சடையன் கூறுகையில், ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளேன். இதுவரை கணக்கில்லாத அளவிற்கு அதிக பாம்புகளை பிடித்துள்ளேன். தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று விஷம் அதிகம் உள்ள பாம்புகளை பிடித்துள்ளேன். அதிக விஷம் கொண்ட நாகமான ராஜநாகம், பிட்டிக் கோப்ரா எனும் நல்லபாம்பு ஆகிய பாம்புகளை பிடித்த அனுபவம் உள்ளது. எங்கள் தந்தையார் காலத்தில் இருந்தே பாம்பு பிடிக்கும் அனுபவம் எங்ளுக்கு உண்டு. எங்கள் தந்தையார் காலத்தில் பாம்புகளை உயிரோடு பிடிக்க வேண்டும் என்ற சட்டம் வந்ததால் நாங்கள் பாம்புகளை உயிரோடு பிடிக்க கற்றுக்கொண்டேன். வடிவேல் கோபால் கூறுகையில், ரொம்ப சந்தோஷம், ரொம்ப மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.
பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல்:-
அதேபோல் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்படும் நீர் இழப்பை கட்டுப்படுத்தும் ORS கரைசலை உருவாக்கிய மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம வுபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.