Annamalai: ’அண்ணாமலையின் தனிக்கட்சி முயற்சி? மோடி என்ன செய்வார் தெரியுமா?’ உடைத்து பேசும் பத்திரிகையாளர் மணி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: ’அண்ணாமலையின் தனிக்கட்சி முயற்சி? மோடி என்ன செய்வார் தெரியுமா?’ உடைத்து பேசும் பத்திரிகையாளர் மணி

Annamalai: ’அண்ணாமலையின் தனிக்கட்சி முயற்சி? மோடி என்ன செய்வார் தெரியுமா?’ உடைத்து பேசும் பத்திரிகையாளர் மணி

Kathiravan V HT Tamil
Jan 21, 2025 11:45 AM IST

இனிமேல் அண்ணமலையை முழுவதுமாக பாஜக நம்பாது. அவரது மாற்றம் உறுதி என்றுதான் தகவல்கள் சொல்கின்றன. வெகுவிரைவில் தேசியத் தலைமைக்கு அழைத்துக் கொள்ளப்படுவார். மாநிலத் தலைவராக வானதி சீனிவாசனை நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Annamalai: ’அண்ணாமலையின் தனிக்கட்சி முயற்சி? மோடி என்ன செய்வார் தெரியுமா?’ உடைத்து பேசும் பத்திரிகையாளர் மணி
Annamalai: ’அண்ணாமலையின் தனிக்கட்சி முயற்சி? மோடி என்ன செய்வார் தெரியுமா?’ உடைத்து பேசும் பத்திரிகையாளர் மணி

தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் இதோ:- 

அண்ணாமலை மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆகஸ்ட் மாதம் அவர் தலைவர் ஆனார். 2024 ஆகஸ்ட் மாதத்துடன் அவரது பதவிக்காலம்  முடிவடைந்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

அமித்ஷாவுக்கு பிடிக்கவில்லை!

அண்ணாமலையின் செயல்பாடுகள் அமித்ஷாவுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் மோடியிடம் அண்ணாமலைக்கு நல்ல பெயர் உள்ளதாக தகவல்கள் சொல்லுகின்றன. இன்னமும் அண்ணாமலை மீது நம்பிக்கை தளர்ந்து உள்ளது என்றாலும், நம்பிக்கை சீர் குலைந்துவிடவில்லை. அதிமுக உடன் கூட்டணி வைக்க ஏதுவாக அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற விரும்புவதாக பாஜக தலைமை சொல்லுகின்றன. அண்ணாமலையின் பேச்சுக்களால்தான் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியில் சென்றது. எடப்பாடி பழனிசாமி, மோடியை விமர்சனம் செய்யவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அவர் பாஜக உடன் கூட்டணி வைக்கவில்லை. 

பாஜக பூஜ்ஜியம் ஆகிவிடும்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தனியாக நின்று தோல்வி அடைந்தாலும் அதிமுகவால் 50 தொகுதிகள் வரை வெற்றி பெற முடியும். ஆனால் பாஜக பூஜ்ஜியம் ஆகிவிடும். அதில் இருந்து தப்பிக்க, அண்ணாமலையை மாற்றினால் அதிமுக - பாஜக கூட்டணி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதிமுகவுக்குள்ளேயே ஒரு பிரிவினர் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அடுத்த தலைவர் வானதியா?

இனிமேல் அண்ணமலையை முழுவதுமாக பாஜக நம்பாது. அவரது மாற்றம் உறுதி என்றுதான் தகவல்கள் சொல்கின்றன. வெகுவிரைவில் தேசியத் தலைமைக்கு அழைத்துக் கொள்ளப்படுவார். மாநிலத் தலைவராக வானதி சீனிவாசனை நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை அவரை ஓரம் கட்டுகிறார். ஒரு பெண்மணி, அதுவும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவரை தலைவராக நியனமம் செய்வது, அதிமுக உடன் உறவை சீர் செய்வதற்கான ஒரு முன்னோட்டம். 

தனிக்கட்சி தொடங்குகிறாரா?

அண்ணாமலை ஒருபோதும் தனிக்கட்சி தொடங்கமாட்டார். இவையெல்லாம் கட்டுக்கதைகள். அவர் தனிக்கட்சி தொடங்கினால் அவர் மோடியின் உண்மையான முகத்தை பார்க்க வேண்டி வரும். தனிக்கட்சித் தொடங்கினால் அண்ணாமலை செல்லாக்காசாக ஆவார். ஒருபோதும் அவர் தனிக்கட்சி தொடங்கும் காரியங்களை செய்யமாட்டார். தனியாக கடை விரித்தால் சிறைக்கே போக கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை அவர் நன்றாக உணர்ந்து உள்ளார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.