Annamalai : 'பள்ளிக் கல்வித்துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக' - அண்ணாமலை கண்டனம்
Annamalai : பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தகவல்களை பார்க்கலாம்.

Annamalai : பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
'கிராமப்புறப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த, ASER (Annual Status of Education Report – Rural) அறிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த அறிக்கையின்படி, தமிழகம் பல பிரிவுகளில், நாட்டின் பிற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக, விளம்பரம் செய்வதில் மட்டுமே நம்பர் ஒண்ணாக இருக்கும் டிராமா மாடல் திமுக அரசு, தமிழகத்தின் கல்வித் தரம் குறித்து கூறி வருவதற்கு நேர்மாறாக, இந்த அறிக்கையின் புள்ளி விவரங்கள் இருக்கின்றன.
தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களை, கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைப்பதும், பாத்திரங்களைக் கழுவ வைப்பதும், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களைப் போல பயன்படுத்துவதும் எனத் தொடர்ந்து மிகவும் தரக்குறைவான முறையில் நடத்தி வரும் பள்ளிக் கல்வித் துறையின் செயலிழந்த தன்மையால், தமிழகப் பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் இழந்து வருவது, இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.