Annamalai: மகனின் நண்பர்களை அமர வைக்க.. கலெக்டரை மேடையில் அகற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.. அண்ணாமலை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: மகனின் நண்பர்களை அமர வைக்க.. கலெக்டரை மேடையில் அகற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.. அண்ணாமலை

Annamalai: மகனின் நண்பர்களை அமர வைக்க.. கலெக்டரை மேடையில் அகற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.. அண்ணாமலை

Marimuthu M HT Tamil
Jan 16, 2025 05:49 PM IST

Annamalai: மகனின் நண்பர்களை அமர வைக்க.. கலெக்டரை மேடையில் அகற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.. அண்ணாமலை விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Annamalai: மகனின் நண்பர்களை அமர வைக்க.. கலெக்டரை மேடையில் அகற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.. அண்ணாமலை கண்டனம்
Annamalai: மகனின் நண்பர்களை அமர வைக்க.. கலெக்டரை மேடையில் அகற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.. அண்ணாமலை கண்டனம்

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் கூறியிருப்பதாவது, ‘’மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.

முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்’’ என விமர்சித்தார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.