‘தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா?’ திமுகவை விளாசும் அண்ணாமலை!
‘தொடர்ந்து தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நானும் எனது வீட்டின் முன்பாக, பாஜக நிர்வாகிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றேன்’

‘தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா?’ திமுகவை விளாசும் அண்ணாமலை!
நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது. தமிழக உரிமைகளுக்கு இது போன்ற முயற்சிகளை எடுக்காத திமுக அரசை கண்டித்து, தமிழக பாஜக சார்பில், கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன் படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டம் நடந்தது. வீடுகளுக்கு முன் கருப்பு கொடிகளை ஏந்தி, பாஜகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில வீதிகளில் வந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னுடைய எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளார்.