நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்.. அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. அத்தனை குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார். மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கின் தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.
'கருணை காட்டக்கூடாது'
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரன், தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் கதறி அழுதுள்ளார். அவர் கோரிக்கை வைத்த நிலையில், ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும், கருணை காட்டக்கூடாது என அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்த் வாதத்தை முன்வைத்தார்.
'அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்' - காவல்துறை
குற்றவாளி ஞானசேகரனுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்றும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
