Anna University case: ‘யார் அந்த SIR?’ சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டிய அதிமுக!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த SIR?’ என்ற கேள்வி உடன் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த SIR?’ என்ற கேள்வி உடன் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது காதலருடன் மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்த நிலையில், அப்போது வந்த அடையாளம் தெரியாத நபர், இருவரையும் வீடியோ எடுத்ததுடன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவர் தப்பியோடி முயன்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் மாணவியிடம் அத்துமீறும் முன்னர் ’சார்’ பெயரில் ஞானசேகரன் செல்போனில் ஒருவரிடம் பேசியதாக தெரிகிறது.
யார் அந்த சார்?
இந்த விவகாரம் தொடர்பாக நடந்த வழக்கில் ஞானசேகரன் ‘சார்’ என்று செல்போனில் அழைத்தது யார்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தலைமை வழக்கறிஞர். குற்ற செயலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் சிலருக்கு இதில் தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க அவரது செல்போனை வாங்கி விசாரணை செய்ததாகவும், அது ஏரோ ப்ளைன் மோடில் இருந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
சம்பவத்தின் போது தனக்கு பின் பெரியகுழு உள்ளது என்று காட்டவே போன் செய்து உள்ளதாக தலைமை வழக்கறிஞர் கூறி உள்ளார். மேலும் ஞானசேகரனின் செல்போன் நிறுவனத்திடம் இருந்து சில தகவல்களை கேட்டு பெற உள்ளதாகவும் தலைமை வழக்கறிஞர் கூறியிருந்தார்.
சென்னை முழுவதும் போஸ்டர்
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஞானசேகரன் ’சார்’ என்று குறிப்பிட்டது யார் என்ற கேள்வி உடன் அதிமுகவினர் சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதில் #SaveOurDaughters என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.