தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ankit Tiwari Case Update: Dvac Objects To Ed Probe Transfer

ED vs DVAC:’அங்கித் திவாரியை ED விசாரிக்க கூடாது!’ DVAC கடும் எதிர்ப்பு!

Kathiravan V HT Tamil
Jan 10, 2024 01:16 PM IST

”Ankit Tiwari Case Update: வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது”

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதை தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை - கோப்புப்படம்
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதை தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை - கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

அமலாக்கத்துறை வழக்கு விசாரணையில் இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரை வழக்கில் இருந்து விடுவிக்க உதவுவதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ‌ரூ.3 கோடி லஞ்சம் கேட்டதாகவும், ஆனால், மருத்துவர் சுரேஷ் பாபு தரமறுக்கவே, கண்டிப்பாக ரூ. 51 லட்சமாவது அன்பளிப்பாகத் தரவேண்டும் எனக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி அன்று திண்டுக்கல் - நத்தம் சாலையில் வைத்து ரூ.20 லட்சத்தை மருத்துவர் சுரேஷ் பாபு கொடுத்துள்ளார். இதனை அடுத்து கடந்த நவம்பர் 30ஆம் தேதி இரவு மீதி பணம் ரூ.31 இலட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் வெறுத்துப்போன மருத்துவர் சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து டிசம்பர் 1ஆம் தேதி அன்று ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பினர்.

பின் மருத்துவர் சுரேஷ் பாபு, திண்டுக்கல் தோமையார்புரம் அருகே நின்றுகொண்டு இருந்த அமலாக்கத்துறை அதிகாரியின் காரில் பணத்தை வைத்து உள்ளார். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி காரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரட்டிச்சென்று கொடைரோடு டோல்கேட் அருகில் மடக்கிப் பிடித்து கைது செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளித்தது.

இந்நிலையில் அவரை கடந்த டிசம்பர் 14ஆம்  தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்த நிலையில் அவருக்கு நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நீதிமன்ற காவலில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. 

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அங்கித் திவாரியிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் அவரை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பக்கூடாது என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன் வைத்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

WhatsApp channel

டாபிக்ஸ்