Tamil News  /  Tamilnadu  /  Anbumani Urges Rs 25 Lakh Sought As Compensation Who Lost Their Lives In Electic Shock
அன்புமணி
அன்புமணி

மின்சாரம் தாக்கி பலியான மூவா் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்குக: அன்புமணி

22 September 2022, 19:39 ISTKarthikeyan S
  • Share on Twitter
  • Share on FaceBook
22 September 2022, 19:39 IST

சென்னை: தருமபுரி சந்தைப்பேட்டையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரி சந்தைப்பேட்டை பகுதியில் வீடு மாற்றும் பணியின் போது மின்சாரம் பாய்ந்து 3 உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளாா்.

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து இன்று பாமக தலைவர் அன்புமணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தருமபுரி சந்தைப்பேட்டையில், வீட்டில் இருந்து பொருட்களை இடமாற்றம் செய்யும்போது மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சந்தைப்பேட்டையில் வாடகை வீட்டில் குடியிருந்த இலியாஸ் என்பவர், வீட்டை காலி செய்வதற்காக அந்த வீட்டில் இருந்த பொருட்களை மாடியிலிருந்து கீழே இறக்கிக் கொண்டிருந்தார்.

அவருடன் இணைந்து வீட்டின் உரிமையாளர் பச்சையப்பன், கோபி ஆகியோர் இரும்பு பீரோவை கயிற்றில் கட்டி, மேலிருந்து இறக்கும் போது வீட்டை ஒட்டிச் சென்ற உயரழுத்த மின்சார கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

இலியாஸ், பச்சையப்பன், கோபி ஆகியோரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று அன்புமணி கூறியுள்ளார்.

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்