’தணிக்கைத் தடை என்ற பெயரில் ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதா?’ பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தணிக்கைத் தடை என்ற பெயரில் ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தணிக்கைத் தடை என்ற பெயரில் ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுய் பெற்றவர்களில் சுமார் 1000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தணிக்கைத் தடை என்ற பெயரில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 வகையான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி ஓய்வு பெறும் போது கடைசி பணி நாளில் அவர்களுக்கு உரிய ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், 2024&25ஆம் கல்வியாண்டில் ஓய்வுபெற்ற தொடக்கக்கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களில் 1000 பேருக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அவை அவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வுக்காலப் பயன்களை வழங்க வேண்டியது அரசின் முதல் கடமை; அதை வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.