தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Alanganallur Muniyandi Swamy Temple Issue Case

நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றாதது ஏன்? - ஐகோர்ட் சரமாரி கேள்வி

Karthikeyan S HT Tamil
Mar 20, 2023 07:12 PM IST

Alanganallur Muniyandi Swamy Temple: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயிலில் திருவிழா நடத்துவதற்கு கமிட்டி அமைக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளதா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை - கோப்புபடம்
உயர் நீதிமன்ற மதுரை கிளை - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் வரும் ஏப்ரல் 4 தேதி நடைபெற உள்ள பங்குனி திருவிழாவில் தனி நபர்களைக் கொண்டு அறநிலைத்துறை அதிகாரிகள் கமிட்டி அமைத்து திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். எனவே 2017 ஆம் ஆண்டு உத்தரவை பின்பற்றி எந்த தனி நபர்களும் தற்காலிக கமிட்டி அமைத்து திருவிழா நடத்தாமல் இந்து சமய அறநிலைத்துறை நேரடியாக திருவிழாவை நடத்த வேண்டும்." என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் திருவிழா தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்ட அழைப்பிதழில் தனி நபர்களின் தொலைபேசி எண்கள் பதிவிடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கோயில் திருவிழா தொடர்பான அழைப்பிதழை தயார் செய்துள்ளனர். அதில் அச்சிட்டுள்ள நம்பர் யாருடையது, எதற்காக கோயிலுக்கு தொடர்பு இல்லாத தனிநபர்களின் தொலைபேசி எண்கள் அழைப்பிதழில் பதிவு செய்யப்பட்டது. யார் அவர்கள் என தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து மொபைல் போன்கள் இல்லை என்றால் கோயில்களுக்கு நன்கொடைகள் செலுத்த இயலாதா? என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு இந்து சமய அறநிலையத் தரப்பில், "சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதற்காகவே தற்காலிக விழா கமிட்டி அமைத்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் எந்தவித கமிட்டியும் அமைக்கப்படாது என்று தெரிவித்திருக்கிறீர்கள். அதன் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மீண்டும் தற்காலிக கமிட்டி அமைத்தது ஏன்..? எதற்காக நீதிமன்றத்தில் பொய்யான பதில் தெரிவித்தீர்கள்..? இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் திருவிழா நடத்துவதற்கு கமிட்டி அமைக்க வேண்டும் என்று எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்