தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai -Salem Flight Service : மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு.. சென்னை - சேலம் இடையே மீண்டும் விமான சேவை தொடக்கம்!

Chennai -Salem Flight Service : மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு.. சென்னை - சேலம் இடையே மீண்டும் விமான சேவை தொடக்கம்!

Divya Sekar HT Tamil
Oct 29, 2023 09:04 AM IST

சென்னை - சேலம் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் விமான சேவை தொடங்குகிறது.

சென்னை - சேலம் இடையே மீண்டும் விமான சேவை
சென்னை - சேலம் இடையே மீண்டும் விமான சேவை

சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் இங்கு விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. சென்னை - சேலம் இடையே 2018 ஆம் ஆண்டு விமான சேவை தொடங்கப்பட்டது.

அதன்படி சென்னையில் இருந்து சேலம் நகருக்கு ட்ரூஜெட் தனியார் பயணிகள் விமான நிறுவனம், நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் சென்னை- சேலம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. சேலத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டதால், சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே சென்னை - சேலம் இடையே விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னை- சேலம்- சென்னை இடையே தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்துள்ளது. அதன்படி, இன்று (அக் 29) முதல் விமான சேவை தொடங்குகிறது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 11.20 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 12.30 மணிக்கு சேலம் விமான நிலையம் சென்றடைகிறது. அதன் பின்பு அதே விமானம் சேலத்தில் இருந்து பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு பகல் 1.45 மணிக்கு வருகிறது. 

ட்ரெண்டிங் செய்திகள்

சேலம் விமான நிலையத்தில், பெரிய விமானங்கள் இறங்குவதற்கு, இன்னும் வசதிகள் செய்யப்படாததால், ஏடிஆர் எனப்படும் 72 சீட்டுகள் கொண்ட சிறிய ரக விமானம் மட்டுமே இயக்கப்பட உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.