’தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது முழுக்க முழுக்க உண்மை’ எல்.கே.சுதீஷ் பங்கிரங்க குற்றச்சாட்டு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது முழுக்க முழுக்க உண்மை’ எல்.கே.சுதீஷ் பங்கிரங்க குற்றச்சாட்டு!

’தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது முழுக்க முழுக்க உண்மை’ எல்.கே.சுதீஷ் பங்கிரங்க குற்றச்சாட்டு!

Kathiravan V HT Tamil
Published May 04, 2025 11:05 AM IST

”இதற்கு மறுப்பு தெரிவித்த ஈபிஎஸ், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ராஜ்யசபா சீட் குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லை என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார்”

’தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது முழுக்க முழுக்க உண்மை’ எல்.கே.சுதீஷ் பங்கிரங்க குற்றச்சாட்டு!
’தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது முழுக்க முழுக்க உண்மை’ எல்.கே.சுதீஷ் பங்கிரங்க குற்றச்சாட்டு!

ராஜ்யசபா சீட் விவகாரம்

முன்னதாக தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி இருந்த நிலையில், எல்.கே.சுதீஷின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக-தேமுதிக கூட்டணி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக-தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது நடந்த பேச்சுவார்த்தைகளில், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று வாய்மொழி உறுதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பிலும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதனை உறுதி செய்து இருந்தார். இது தொடர்பாக எந்தவொரு எழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்று அதிமுக தரப்பு தெரிவித்திருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஈபிஎஸ், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ராஜ்யசபா சீட் குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லை என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார். இருப்பினும், எல்.கே.சுதீஷின் இந்தப் புதிய கருத்து, அதிமுக-பாஜக கூட்டணிக்கு மேலும் கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், கூட்டணி உறவுகளில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

என்ன செய்யப்போகிறது அதிமுக தலைமை

தேமுதிக தொடர்ந்து ராஜ்யசபா சீட் கோரி வரும் நிலையில், அதிமுக தனது உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் கூட்டணிகளை வலுப்படுத்த முயற்சிக்கிறது. தற்போது காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களை யாருக்கு ஒதுக்குவது, எவ்வாறு கூட்டணி கட்சிகளை சமநிலைப்படுத்துவது என்பது குறித்து அதிமுக தலைமை முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இது தொடர்பாக எல்.கே.சுதீஷ் எந்தவொரு எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் குறித்தும் வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும், அவரது “நேரம் வரும்போது பேசுவேன்” என்ற கருத்து, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், பாமக உள்ளிட்ட பிற கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகளும் இன்னும் இறுதியாகவில்லை என்ற சூழலில், அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, அதிமுகவும் தேமுதிகவும் தங்கள் கூட்டணியை எவ்வாறு வலுப்படுத்தப் போகின்றன, எல்.கே.சுதீஷின் கருத்துக்கு அதிமுக தரப்பு எவ்வாறு பதிலளிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது. தமிழ்நாட்டில் 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.