‘டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?’: சரமாரியாக சந்தேகங்களை அடுக்கிய அதிமுக!
' இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?’ என டாஸ்மாக் எம்.டி.வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை குறித்து அதிமுக எக்ஸ் தளப்பக்கம் கேள்வி எழுப்பியிருக்கிறது

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 16) காலை முதல் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனின் மணப்பாக்க இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்துவிட்டு, அவரை மேலும் விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில் எம்.டி எனப்படும் மேலாண் இயக்குநர் வீட்டின் அருகே, கிழிந்த நிலையில் ஆவணங்கள் இருந்தது. இதனை அதிமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் இதுதொடர்பாகவும், இதில் தொடர்புடைய ரத்தீஷ் என்பவர் குறித்தும் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியான பதிவில், ’’டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.