முருகன் மாநாட்டில் அண்ணா குறித்து விமர்சனம்! ’அதிமுக அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது’ சேகர்பாபு விளாசல்!
"பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர் சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அதன்பின் பேசலாம். வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை எடுத்து, ‘நாட்டு நட்டாயா, கலை பறித்தாயா’ என்று அவரை திருப்பி தாக்க வேண்டியிருக்கும்," என்று அமைச்சர் கூறினார்.

அண்ணா, பெரியாரை விமர்சனம் செய்த முருகன் மாநாட்டு மேடையில் அதிமுகவினர் அமர்ந்து இருந்தது அடிமைசாசனம் எழுதி கொடுத்துவிட்டதை காட்டுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
கல்வி நிறுவனங்களின் முன்னேற்றம்
இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, 10 கல்லூரிகளைத் தொடங்க அனுமதி பெறப்பட்டு, முதல் கட்டமாக 4 கல்லூரிகள் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பாட்டில் உள்ளன. 25 பள்ளிகள் மற்றும் 10 கல்லூரிகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கிறது. 136 கோடி ரூபாய் செலவில் ஆய்வகங்கள், நூலகங்கள், மற்றும் கூடுதல் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
திருக்கோவில்களின் மேம்பாடு
குடமுழுக்கு: திராவிட மாடல் ஆட்சியில் 3117 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. குறிப்பாக, 117 முருகர் கோவில்களுக்கு குடமுழுக்கு முடிந்து, 136 கோவில்களுக்கு பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 843 முருகர் கோவில் பணிகள் 1043 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன.