Express Avenue : ‘யார் அந்த சார்?’ எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் அதிமுக போராட்டம்.. உடனே அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்!
அஇஅதிமுக ஐடி விங்க் சார்பாக நடந்த இந்த நூதன போராட்டம், மால் நடவடிக்கைகளில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தினாலும், திட்டமிட்டபடி, ஒருங்கிணைப்பாக அவர்கள் தங்கள் போராட்டத்தை செய்து முடித்தனர்.sா
அண்ணா பல்கலை கழக மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மாணவியிடம் ‘சார்’ என்கிற ஒரு நபர் குறித்து ஞானசேகரன் பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்த நபரை காப்பாற்ற தமிழக காவல் துறை முயற்சிப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளன.
இந்த நிலையில், இன்று தமிழகம் முழுதும், ‘யார் இந்த சார்?’ என்கிற வாசகத்துடன் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில் சென்னையில் மையப்பகுதியில் உள்ள பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், 50க்கும் மேற்பட்ட அஇஅதிமுகவினர் நுழைந்தனர்.
யார் அந்த சார்? குரல் எழுப்பிய அதிமுக
கையில் ‘யார் அந்த சார்?’ என்கிற பதகையை ஏந்திய படி, மாலின் தரை தளத்தை சுற்றி நின்ற அவர்கள், மாலில் இருந்தவர்களின், அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஞாயிற்று கிழமை என்பதால், மாலில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. குறிப்பாக, குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகள் என பலரும் இருந்தனர்.
அவ்வாறு வந்தவர்களிடத்தில், அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து, அதிமுகவினர் விளக்கினர். அஇஅதிமுக ஐடி விங்க் சார்பாக நடந்த இந்த நூதன போராட்டம், மால் நடவடிக்கைகளில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தினாலும், திட்டமிட்டபடி, ஒருங்கிணைப்பாக அவர்கள் தங்கள் போராட்டத்தை செய்து முடித்தனர்.
அதிமுக போராட்டத்திற்கு அண்ணாமலை ஆதரவு
இந்நிலையில் அதிமுகவின் இந்த போராட்டத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளார். அது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர், பதிவாகவும் வெளியிட்டார்.
அஇஅதிமுகவினரின் இந்த போராட்டம் தொடர்பாக, போலீஸ் விசாரணை நடத்தவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் வாய்ப்பிருக்கிறது.