’யார் அந்த தியாகி?’ சட்டப்பேரவையில் அதிமுகவினர் அணிந்து வந்த பேட்ஜ்! அதிர்ச்சியில் திமுக!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’யார் அந்த தியாகி?’ சட்டப்பேரவையில் அதிமுகவினர் அணிந்து வந்த பேட்ஜ்! அதிர்ச்சியில் திமுக!

’யார் அந்த தியாகி?’ சட்டப்பேரவையில் அதிமுகவினர் அணிந்து வந்த பேட்ஜ்! அதிர்ச்சியில் திமுக!

Kathiravan V HT Tamil
Published Apr 07, 2025 10:47 AM IST

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறி இருந்த நிலையில் “அந்த தியாகி யார்?” என்ற பேட்ஜ்களை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்

’யார் அந்த தியாகி?’ சட்டப்பேரவையில் அதிமுகவினர் அணிந்து வந்த பேட்ஜ்! அதிர்ச்சியில் திமுக!
’யார் அந்த தியாகி?’ சட்டப்பேரவையில் அதிமுகவினர் அணிந்து வந்த பேட்ஜ்! அதிர்ச்சியில் திமுக!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தொடங்கியது. வீட்டு வசதி மற்றும் நகர்புற துறை மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறி இருந்த நிலையில் “அந்த தியாகி யார்?” என்ற பேட்ஜ்களை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குவதாகக் கூறி, ஆயிரம் கோடி ரூபாயை அமுக்கியது யார் என்பதையும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பவும் அதிமுகவினர் திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே தமிழகம் முழுவதும் இதே கேள்வியுடன் கூடிய போஸ்டர்கள் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்தன. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்புகளிலும், அறிக்கைகளிலும் இதனை தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், உரிமம் பெறாத பார்கள் மூலம் 40,000 கோடி ரூபாய் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் இந்த பேட்ஜ்களை அணிந்து சட்டமன்றத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த விவகாரம் சட்டமன்றத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் பாலாஜிதான் தியாகியா?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தபோது, அவரைப் பாராட்டி ஒரு பதிவை தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டார். 2024 செப்டம்பர் 26 அன்று, செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபின், ஸ்டாலின் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத்துறையானது அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!”