‘டாஸ்மாக் வழக்கில் ED-யின் தொடர் ரெய்டுகள்: வசமாய் சிக்கும் முதல் குடும்பம்?’ அதிமுக ஐ.டி.விங் ட்வீட்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘டாஸ்மாக் வழக்கில் Ed-யின் தொடர் ரெய்டுகள்: வசமாய் சிக்கும் முதல் குடும்பம்?’ அதிமுக ஐ.டி.விங் ட்வீட்!

‘டாஸ்மாக் வழக்கில் ED-யின் தொடர் ரெய்டுகள்: வசமாய் சிக்கும் முதல் குடும்பம்?’ அதிமுக ஐ.டி.விங் ட்வீட்!

Kathiravan V HT Tamil
Published May 16, 2025 03:09 PM IST

”TASMAC ஊழல்- பத்து ரூபாய் பாலாஜி- ரத்தீஷ்- ஆகாஷ் பாஸ்கரன்- அன்பில் மகேஷ்- உதயநிதி- Connect The Dots!”

‘டாஸ்மாக் வழக்கில் ED-யின் தொடர் ரெய்டுகள்: வசமாய் சிக்கும் முதல் குடும்பம்?’ அதிமுக ஐ.டி.விங் ட்வீட்!
‘டாஸ்மாக் வழக்கில் ED-யின் தொடர் ரெய்டுகள்: வசமாய் சிக்கும் முதல் குடும்பம்?’ அதிமுக ஐ.டி.விங் ட்வீட்!

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன்

மணப்பாக்கம், சி.ஆர்.புரத்தில் உள்ள இவரது இல்லத்தில் அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை முன்பு இவருக்கும் மற்ற முக்கிய அதிகாரிகளுக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர அனுமதித்த நிலையில், இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் 

தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனுஷ் நடித்து இயக்கி வரும் 'இட்லி கடை', சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' போன்ற படங்களைத் தயாரித்து வருகிறார். இவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இவரது வீட்டில் சோதனை நடத்தப்படுவது ஏன் என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், தேனாம்பேட்டை, தி.நகர், சேத்துப்பட்டு, அண்ணா சாலை, மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

1000 கோடி முறைகேடு 

இந்தச் சோதனைகள், டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார்  ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறைக்குத் தெரிய வந்துள்ளதன் அடிப்படையில் நடைபெறுகின்றன. டெண்டர் வழங்குதல், மதுபானக் கொள்முதல், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தல் மற்றும் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.

அதிமுக ஐடி விங் விமர்சனம் 

இந்த ரெய்டு தொடர்பாக அதிமுக ஐடி விங் செய்துள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ”டாஸ்மாக் வழக்கில் ED-யின் தொடர் ரெய்டுகள்: வசமாய் சிக்கும் முதல் குடும்பம்? உதயநிதியின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் வீட்டிலும், உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஷின் உறவினர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை ரெய்டு! TASMAC ஊழல்- பத்து ரூபாய் பாலாஜி- ரத்தீஷ்- ஆகாஷ் பாஸ்கரன்- அன்பில் மகேஷ்- உதயநிதி- Connect The Dots!” என பதிவிடப்பட்டு உள்ளது.