‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் மாணவிகளின் அழுகுரல் கேட்கவில்லையா?’: முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக ஐடி விங்
தாம்பரம் அரசு விடுதியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு மறைவதற்குள்ளாகவே, இன்றைய தினம் காஞ்சிபுரத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை அதிமுக ஐடி விங் விமர்சித்து இருக்கிறது.

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் மாணவிகளின் அழுகுரல் கேட்கவில்லையா?’: முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக ஐடி விங்
தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவிகள் பாதுகாப்பை உறுதிசெய்வது யார் பொறுப்பு என்றும்; தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா என்பது குறித்தும் அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதேபோல், காஞ்சிபுரத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதையும் அதிமுக ஐடி விங் கண்டித்து இருக்கிறது.
இதுதொடர்பாக, அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியதாவது, ‘’ தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவிகளைக் காண பெற்றோர்களுக்கு திமுக அரசு அனுமதி மறுப்பதாக செய்திகள் வருகின்றன.
எதற்காக பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது முதலமைச்சர் ஸ்டாலின்.