'இது சாதாரணமல்ல.. இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் குகேஷின் கையில் உள்ளது..' வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி
தமிழக செஸ் வீரர் குகேஷ், நார்வே செஸ் போட்டியில் மக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

'இது சாதாரணமல்ல.. இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் குகேஷின் கையில் உள்ளது..' வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி
நார்வே செஸ் போட்டியில், உலகின் முதல் இடம் வகிக்கும் மக்னஸ் கார்ல்சனை நம் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் தனது திறமையால் வீழ்த்தி வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்ற அந்தத் தருணம் உலக அளவில் பேசுபொருளான நிலையில், பலரும் குகேஷிற்கு தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்காலம் உங்கள் கையில்..
அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவரது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "குகேஷ் என்ன ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்! நேற்று கார்ல்சனை தோற்கடித்தது சிறிய சாதனையல்ல - உண்மையிலேயே ஒரு சாம்பியன். இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் உங்களின் அற்புதமான கைகளில் உள்ளது." எனக் குறிப்பிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.