தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Aiadmk General Secretary Eps Press Conference Regarding The Parliamentary Election Alliance

EPS: ’அப்போ கோ பேக் மோடி! இப்போ வெல்கம் மோடியா?’ விளாசும் ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Feb 24, 2024 02:24 PM IST

“தமிழ்நாட்டு மக்கள் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கவில்லை”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

காவிரி நதிநீர் பிரச்னை வந்தபோது உச்சநீதிமன்றம் மூலம் சட்டப்போராட்டம் நடத்தி நல்ல தீர்ப்பை பெற்றோம். அதை அமல்படுத்த கால தாமதம் செய்த காரணத்தால் நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தோம். இதனால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. 

திமுக மற்றும் அதன் கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டின் பிரச்னையை எழுப்பவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிதான். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் வென்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக சொன்னது. இதுவரை ரத்து செய்யவில்லை. தமிழ்நாட்டு மக்கள் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கவில்லை. மேகதாது பிரச்னையில் 28அவது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஓட்டு எடுப்பு நடந்துள்ளதாக பத்திரிக்கை செய்தி வந்துள்ளது. 

அதிமுக அரசு கடுமையாக சட்டப்போராட்டம் நடத்தி பெற்ற தீர்ப்பை காக்கத் திராணி அற்ற அரசாக விடியா திமுக அரசு உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது மேகதாது அணையை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தினோம். தமிழர் உரிமையை மீட்போம்; தமிழ்நாட்டை காப்போம் என்ற தலைப்பில் மக்களை சந்திக்க உள்ளோம். 

IPL_Entry_Point