சென்னை ஐஐடிக்கு செல்லும் பழங்குடியின மாணவி! கல்வி செலவை அதிமுக ஏற்கும் என ஈபிஎஸ் அறிவிப்பு!
“கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன். அவரது பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, மாணவி ராஜேஸ்வரியின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், மாணவி ராஜேஸ்வரிக்கான படிப்பு செலவுகளை அதிமுக ஏற்கும்”

சென்னை ஐஐடிக்கு செல்லும் பழங்குடியின மாணவி! கல்வி செலவை அதிமுக ஏற்கும் என ஈபிஎஸ் அறிவிப்பு!
சென்னை ஐஐடியில் இடம் கிடைத்து உள்ள கல்வராயன்மலையை சேர்ந்த பழங்குடி இன மாணவியின் கல்வி செலவினை அதிமுகவே ஏற்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி, 12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், #JEE தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து, ஐஐடி மெட்ராசில் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன்.