EPS: பாலியல் தொல்லை கொடுத்து தர்ம அடி வாங்கிய அதிமுக நிர்வாகி.. உடனே கட்சியிலிருந்து நீக்கிய ஈபிஎஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps: பாலியல் தொல்லை கொடுத்து தர்ம அடி வாங்கிய அதிமுக நிர்வாகி.. உடனே கட்சியிலிருந்து நீக்கிய ஈபிஎஸ்!

EPS: பாலியல் தொல்லை கொடுத்து தர்ம அடி வாங்கிய அதிமுக நிர்வாகி.. உடனே கட்சியிலிருந்து நீக்கிய ஈபிஎஸ்!

Karthikeyan S HT Tamil
Jan 30, 2025 05:40 PM IST

EPS: சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தில் பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதான அ.தி.மு.க. நிர்வாகி பொன்னம்பலத்தை கட்சியிலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

EPS: பாலியல் தொல்லை கொடுத்து தர்ம அடி வாங்கிய அதிமுக நிர்வாகி.. உடனே கட்சியிலிருந்து நீக்கிய ஈபிஎஸ்!
EPS: பாலியல் தொல்லை கொடுத்து தர்ம அடி வாங்கிய அதிமுக நிர்வாகி.. உடனே கட்சியிலிருந்து நீக்கிய ஈபிஎஸ்!

இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பொன்னம்பலம் (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அ.தி.மு.க., குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஐடி துறையில் வேலை பார்த்து வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பொன்னம்பலத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, சம்பவம் அறிந்து பாதிக்கப்பட்ட பெண்களின் சக தோழிகள் பொன்னம்பலத்தை துடைப்பம் கொண்டு அடித்து விரட்டியுள்ள சம்பவமும் நடந்துள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை எடுத்த ஈபிஎஸ்

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்தநிலையில், பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதான அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.