‘கேரள முதல்வர் சும்மா விடுவாரா? நீங்க மட்டும் ஏன்?’ முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
‘இதேபோன்று நமது தமிழக கழிவுகளை கேரளா மாநிலத்தில் கொட்டினால் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் எப்படி எதிர்வினை ஆற்றி இருப்பார் என்பதை தமிழக முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் மௌனம் காப்பது என்பது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்’

தமிழகத்தின் மருத்துவக் கழிவுகளை கேரளாவில் கொட்டினால், கேரள முதலமைச்சர் எப்படி எதிர்வினை ஆற்றி இருப்பர் என்பதை முதல்வர் ஸ்டாவின் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும், வாக்களித்த மக்களுக்கு சோதனை என்றால், புலி போல் பாய்ந்து கேள்வி கேட்க வேண்டிய ஸ்டாலின் பூனை போல பதுங்கலாமா? என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மதுரையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பேச்சு வார்த்தை என்ன ஆச்சு?
‘‘கேரளாவும், தமிழ்நாடும் மாமன், மச்சான் உறவாடவும், அண்ணன், தம்பி உறவாகவும், தாய், பிள்ளைகள் உறவாகும் காலங்காலமாக பேணிகாக்கபட்டு வந்தது. தற்போது எல்லை தாண்டிய தொல்லையை இன்னைக்கு தமிழகம் அணுபவிக்க கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
நமது முல்லைப் பெரியாறு உரிமை பிரச்சனையில் கூட ,அதில் மராமத்து செய்யும் பணியில் கூட 5நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையை தமிழ்நாடு சந்தித்து வருகிறது, சட்டமன்றத்தில் எடப்பாடியார் முதலமைச்சர் பார்த்து கேள்வி கேட்டார், அதில் கேரளா மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவு நூலகத்தை திறக்க செல்கிறீர்கள், அப்போது கேரளா முதலமைச்சரிடம் முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? என்று கேள்வி கேட்டார், அப்போது மூத்த அமைச்சர் நிச்சயமாக பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறினார்.