’அடிப்படை வசதி இல்லாத கரூர் வேளாண்மை கல்லூரி’ அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
”மாணவர்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோரி, கடந்த மார்ச் 7, 2024 மற்றும் மே 6, 2025 ஆகிய தேதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தியும், அரசு இதில் அக்கறை காட்டாமல் இருந்து வருவதாக அதிமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசின் இத்தகைய போக்கிற்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்”

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தராத திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தராத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் ஜூன் 11, 2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டு காலமாக திமுக அரசு மக்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வருவதாகவும், வருங்கால சந்ததியினர் கல்வி பயில்வதற்குத் தேவையான வசதிகளைக்கூட செய்து தராமல் வஞ்சிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, 2021 டிசம்பரில் அரசாணை வெளியிடப்பட்டு, கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா மண்டபத்தில் தொடங்கப்பட்ட புதிய வேளாண்மைக் கல்லூரியில், மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான ஆய்வகம், கழிப்பிட வசதிகள், தங்கும் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.