அதிமுக கூட்டணி விவகாரம்: ’ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைபட வேண்டாம்’ தங்கம் தென்னரசுவுக்கு ஈபிஎஸ் பதில்!
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்டத் தேவையில்லை. திமுக கடந்த காலங்களில் எப்படி இருந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்

கூட்டணி கணக்கு குறித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேச்சு, ’ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது’ போல் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
கூட்டல், கழித்தல் கணக்கை யாரோ போடுகிறார்கள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், எங்களோடு அரசியல் களத்தில் நீண்டகாலமாக களமாடிக் கொண்டு இருப்பவர்களாக நீங்கள் உள்ளீர்கள். தங்களோடு இருக்கும் தொண்டர்களும் கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், இயக்கப்பற்றால் அரசியல் களத்தில் களமாடுகிறார்கள்.
அந்த தொண்டர்களோடு பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அண்ணன் தங்கமணி அவர்கள் கூட்டல் கணக்கை இங்கே போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்களுடன் கூட்டல், கழித்தல் கணக்கை வேறு ஒருவர் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அதுவும் வேறு எங்கோ ஒருவர் உட்கார்ந்து உங்களுடைய தொண்டர்கள் எதிர்காலம், உங்கள் அனுதாபிகளின் எதிர்காலத்தை காலத்தில் நீர்த்து போக செய்யும் அளவுக்கு சாணக்கிய தந்திரத்துடன் சிலர் எங்கோ உட்கார்ந்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
