தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Agriculture Minister Mrk Panneerselvam Present The Agri Budget For 2024-25 In Assembly

TN Agri Budget 2024: தமிழக வேளாண் பட்ஜெட்..முக்கிய அம்சங்கள் என்ன? - முழு விபரம் இதோ..!

Karthikeyan S HT Tamil
Feb 20, 2024 11:07 AM IST

தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

 • 2482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
 • மண் வளத்தைக் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்.
 • ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட ரூ.1 கோடி ஒதுக்கீடு.
 • விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்.
 • கோயம்புத்தூரில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்வதற்காக ஆய்வகம் அமைக்கப்படும்.
 • முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு
 • ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ 200 கோடி ஒதுக்கீடு.
 • பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி ஒதுக்கீடு.
 • உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10.500 கோடி ஒதுக்கீடு.
 • தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
 • 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு.
 • உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 இலட்சம் நிதி ஒதுக்கீடு .
 • நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு.
 • 'வேளாண் காடுகள் திட்டம்' மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு.
 • 'துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்' அறிமுகம். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு.
 • 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.
 • தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.
 • 'மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்' மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
 • ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயப்படுத்தப்படும்.
 • 10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
 • 2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு.
 • நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்