கைவிட்டு போன அமைச்சர் பதவி! சாதாரண எம்.எல்.ஏவாக அமலாக்கத்துறை ஆபீசில் கையெழுத்து இட்ட செந்தில் பாலாஜி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கைவிட்டு போன அமைச்சர் பதவி! சாதாரண எம்.எல்.ஏவாக அமலாக்கத்துறை ஆபீசில் கையெழுத்து இட்ட செந்தில் பாலாஜி!

கைவிட்டு போன அமைச்சர் பதவி! சாதாரண எம்.எல்.ஏவாக அமலாக்கத்துறை ஆபீசில் கையெழுத்து இட்ட செந்தில் பாலாஜி!

Kathiravan V HT Tamil
Published Apr 28, 2025 01:02 PM IST

நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினராக இன்று செந்தில் பாலாஜி நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளித்த ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

கைவிட்டு போன அமைச்சர் பதவி! சாதாரண எம்.எல்.ஏவாக அமலாக்கத்துறை ஆபீசில் கையெடுத்து இட்ட செந்தில் பாலாஜி!
கைவிட்டு போன அமைச்சர் பதவி! சாதாரண எம்.எல்.ஏவாக அமலாக்கத்துறை ஆபீசில் கையெடுத்து இட்ட செந்தில் பாலாஜி!

வேலை வாங்கி தருவதாக மோசடி 

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கையெழுத்திட வந்தார். 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருமானவரித்துறை மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நிபந்தனை ஜாமீன் 

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதன் விளைவாக, அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு காலத்திற்கும் மேல் சிறையில் இருந்தார். பின்னர், உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் நிபந்தனையின் படி, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. பின்னர், இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டு, திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களில் மட்டும் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது.

நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் கையெழுத்து