Advocate General: ‘அரசுத் தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா!’ இக்கட்டான காலத்தில் திமுகவுக்கு துணை நின்றவர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Advocate General: ‘அரசுத் தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா!’ இக்கட்டான காலத்தில் திமுகவுக்கு துணை நின்றவர்!

Advocate General: ‘அரசுத் தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா!’ இக்கட்டான காலத்தில் திமுகவுக்கு துணை நின்றவர்!

Kathiravan V HT Tamil
Jan 10, 2024 07:52 AM IST

“தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது”

மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்
மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் நியமனம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில் தனது ராஜினாமா குறித்த முடிவை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துவிட்டதாகவும், இது தொடர்பான கடிதங்களை அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், ஏற்கெனவே செய்து வந்த வழக்கறிஞர் தொழிலை மீண்டும் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஏற்கெனவே கடந்த 2022ஆம் ஆண்டிலும் தனிப்பட்ட முறையில் ராஜினாமா கடிதத்தை அரசுக்கு வழங்கி இருந்தார். அது தொடர்பான எந்த முடிவுகளும் பின்னர் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அரசுக்கு தனது ராஜினாமா கடிதத்தை கொண்டுத்து தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து ஆர்.சண்முக சுந்தரம் விலகி உள்ளார். 

மூத்த வழக்கறிஞரான ஆர்.சண்முகசுந்தரம் திராவிட இயக்க ஈடுபாடு காரணமாக திமுகவில் பயணித்தவர். 1989 ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு அரசின் குற்றவியல் வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பணியாற்றினார். 

1995ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிராக டான்சி நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்தவர் ஆர்.சண்முகசுந்தரம். இந்த வழக்கை தொடர்ந்ததற்காக ரவுடிகளின் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்தப்பி இருந்தார். 

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆர்.சண்முகசுந்தரம் இருந்தார். 

இந்த நிலையில் அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.