தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'அஜித்துக்கும் எனக்கும் ஒரே Wavelength'..கலைஞர் இருக்கும் போதே தைரியம்..பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்த ஜெயக்குமார்!

'அஜித்துக்கும் எனக்கும் ஒரே Wavelength'..கலைஞர் இருக்கும் போதே தைரியம்..பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்த ஜெயக்குமார்!

Karthikeyan S HT Tamil
May 01, 2024 06:37 PM IST

HBD Ajith, Jayakumar: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை மேடையிலேயே எதிர்த்தவர் நடிகர் அஜித்குமார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார், ஜெயக்குமார்
நடிகர் அஜித்குமார், ஜெயக்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து சிகாகோ நகரத்தில் நடந்த புரட்சியில் தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி பெற்ற தினம் மே தினம். தியாகத்தால் உருவான தினம் தான் தொழிலாளர் தினம். இந்தியாவில் சிந்தனை சிற்பி சிங்கார வேலர் தான் முதன் முதலில் தொழிலாளர் தினத்தை கொண்டாடினார். அவருக்கு எங்களது வீரவணக்கம். அதிமுக தொழிலாளர்களின் உற்ற தோழனாக இருந்தது. ஆனால், திமுக தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கின்றனர். தேர்தல் காலத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அதன் பலன்களை அனுபவிக்க முடியவில்லை. அவர்களுக்கான நிலுவைத் தொகையை கொடுக்கவில்லை. இந்த ஆட்சியில் தொழிலாளர்கள் தட்டேந்தி பிச்சை கேட்டு போராடும் நிலைமையில் உள்ளனர்.

தொழிலாளர் தினத்தை கொண்டாடக்கூடிய ஒரு தகுதி படைத்த இயக்கம் அதிமுக தான். தொழிலாளர் தினத்தில் பிறந்த சகோதரர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுவாக அஜித்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான நன்றியை நான் சொல்வேன். அவர் ஒரு தைரியசாலி. கோழைகளை எனக்கு பிடிக்காது. தைரியசாலியை தான் பிடிக்கும். எதையும் எதிர்கொள்ளும் எந்த சூழ்நிலையும் எதிர்கொண்டு இடம் பொருளை எதிர்பார்க்காமல் தன் கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும். அந்த வகையில் என்னுடைய Wavelength-ல் அஜித் இருக்கிறார் என்பது எனக்கு சந்தோஷம்.

திரைப்பட தயாரிப்பாளர்களை முழுங்கி சாப்பிடுகிறது ரெட் ஜெயிண்ட் மூவிஸ். விஷால் படம் வெளியிடாமல் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார் என்பது தெரியும். பெரிய திமிங்கலமாக இருக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பட தயாரிப்பாளர்களை நசுக்கி, யாரும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை இருக்கிறது.

அந்த காலத்தில் நடிகர் அஜித், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவிற்கு திரைப்படத் துறையினர் கட்டாயமாக அழைக்கப்பட்டனர். அதில் கலந்து கொள்ளவில்லை என்றால் படம் வெளியாகாது என பல நெருக்கடிகள் இருந்தது. எந்தப்படத்திலும் நடிக்க முடியாது என மிரட்டப்பட்டனர். அனைவரும் பயந்தனர். ஆனால் அஜித் நேரடியாக சென்று மேடையில் அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டேன் என கூறினார். அஜித்தின் தைரியத்தை போற்றுகின்ற வகையில் தான் அவருக்கு வாழ்த்து கூறினேன். விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவதற்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால், அதை விரும்புகிறீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "நல்லது செய்ய அரசியல் ஒரு களம். அப்படி அஜித் வந்தால் நாங்கள் வரவேற்போம்." என்று தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்