‘அவங்க முதல் ஆயுதமே ஆபாசம்.. திமுக உண்மையிலே பெண்களுக்கான கட்சியா?’ அவருவருக்கதக்க பேச்சால் ஆவேசமான அதிமுக!
அதிமுக செய்தித் தொடர்பாளர் சசிரேகா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திமுக செய்தித் தொடர்பாளர் விக்கியை கண்டித்தும் திமுகவை கண்டித்தும் அதிமுக காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைகழக வழக்கில், 60 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, சாட்சியங்கள், வாதங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக எடுத்துரைத்ததன் மூலம் விரைவான தீர்ப்பு பெறப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதிலும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதிலும் திமுக அரசும் முதல்வரும் உறுதியாக உள்ளது என அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார்.
யார் அந்த சார்?
அத்தோடு, தமிழ்நாட்டு மாணவிகளை அச்சுறுத்தி அவர்களைக் கல்விநிலையங்களுக்குச் செல்ல விடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் அற்பபுத்தியோடு ‘யார் அந்தச் சார்?’ என அருவருப்பு அரசியல் செய்த பழனிசாமியின் இழிவான அரசியல் அம்பலப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிப் பெற்று தருவதை விட இந்த நிகழ்வை வைத்து திமுகவின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தலாம் எனக் கேவலமான அரசியல் செய்து வந்த அற்பபுத்தி பழனிசாமியின் புரளி நாடகம் தோற்றுப் போனபோதும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மீண்டும் அதே பொய்யை தூக்கி கொண்டு வந்திருக்கிறார் பச்சைப்பொய் பழனிசாமி.