Tamil News  /  Tamilnadu  /  Add Biscuits Are Arranged For The People Gathered In Front Of The Dmk Executives House Where The It Raid Will Take Place
ஐடி ரெய்டு அட்டகாசம்
ஐடி ரெய்டு அட்டகாசம்

ஐ.டி ரெய்டு அட்டகாசம்: தி.மு.க நிர்வாகி வீடு முன்பு குவிந்த மக்களுக்கு சேர், பிஸ்கட் ஏற்பாடு!

26 May 2023, 11:34 ISTPandeeswari Gurusamy
26 May 2023, 11:34 IST

IT raids: கோவையில் ஐடி ரெய்டு நடந்து வரும் திமுக பிரமுகர் வீட்டு முன் குவிந்தவர்களுக்கு பிஸ்கெட், தண்ணீர் சேர் என ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு வருகிறது.

கோவையில் ஐடி ரெய்டு நடந்து வரும தி.மு.க நிர்வாகி வீடு முன்பு குவிந்த மக்களுக்கு சேர், பிஸ்கட், தண்ணீர் என விறுவிறுப்பான முறையில் ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய தமிழகம் முழுவதும் உள்ள பல இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அமைச்சருக்குச் சொந்தமாகச் சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் என்பவரது கரூர் வீடு மற்றும் அலுவலகங்களில் 10 க்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர். மேலும், முக்கிய அரசு ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூரில் வருமானவரித்துறை அதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. கார் கண்ணாடி உடைக்கப்பட்டதை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில், கோவையில் தி.மு.க பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் வீட்டின் முன்பு குவிந்துள்ள நபர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் பாட்டில் மற்றும் சேர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தியபோது, அங்குக் குவிந்த தொண்டர்களுக்கு டீ, காஃபி, பிஸ்கட் மற்றும் உணவு பொட்டலங்கள் ஆகியவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தற்போது புதிய ஐ.டி ரெய்டு அட்டகாசமாக மாறி வருகிறது என்று பேச்சு எழுந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்