ECR: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன்
ECR: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன் குறித்துப் பார்ப்போம்.

ECR: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன் பற்றி அறிவோம்.
சென்னை ECR சாலையில் பெண்கள் பயணித்த காரை சில இளைஞர்கள் வழிமறித்த விவகாரம் தமிழ்நாடெங்கும் பகீர் கிளப்பியது.
இந்நிலையில் ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவைச் சார்ந்தவர் எனவும், கைது செய்யபட்டவர் பயணித்த கார் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருடைய சகோதரர் மகனுக்குச் சொந்தமானது எனவும்; இதன்மூலம், ஈசிஆர் விவகாரத்தில் சிக்கிய இரண்டு கார்களும் அதிமுகவினருடையது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சமூக ஆர்வலரும் நடிகையுமான வினோதினி வைத்தியநாதன், தமிழக அரசு இயந்திரத்தினை நோக்கி பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.
வினோதினி வைத்தியநாதன் முன்வைத்த சில கேள்விகள் பின்வருமாறு:-
- அக்யூஸ்டை பேட்டியெடுத்து (யார் எடுத்திருந்தாலும்) அந்த காணொலியை சமூக வலைதளத்தில் பரப்ப இரு தொலைக்காட்சிக்கு யார் அதிகாரம் தந்தது?
- இந்த வீடியோவை எடுத்தது காவல் துறையா அல்லது நியூஸ் சேனலா? எப்பொழுது எடுத்தார்கள்? அக்யூஸ்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்முன் அவரது வாக்குமூலம் ஏன் சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது?
- அக்யூஸ்டுடைய உறவினர்கள் எந்த கட்சியிலிருந்தால் என்ன? அது இந்த கேஸுக்கு எந்த வகையில் அவசியம்?
- கட்சிக்கொடி, அதுவும் ஆளும் கட்சிக்கொடி மாட்டிக்கொண்டு போனால் டோல் கட்டணம் செலுத்தாமல் போகலாம் என்று சொல்கிறார் இவர். அப்படியென்றால் எல்லோரும் கட்சிக்கொடியை மாட்டிக்கொண்டு போகலாமா? முக்கியமாக, திமுகவில் இருப்பவர்கள் சுங்கக்கட்டணம் செலுத்துவதில்லையா?
- எந்த கட்சிக்கொடி என்பது இங்கு பிரச்னையா அல்லது இவர்கள் செய்தது பாலியல் சீண்டல், தண்டிக்கத்தக்க செயல் என்பது பிரச்சனையா? அப்படி பேட்டி எடுத்தாலுமே கேள்விகள் அவர்கள் செய்த செயலைப்பற்றி அதன் நோக்கத்தைப்பற்றி இருக்க வேண்டுமா அல்லது கேள்விகள் அரசியல் கட்சித் தொடர்புகள் பற்றியிருக்க வேண்டுமா? பெண்களுக்கு தொல்லைகொடுத்த இந்த நபர்களது செயல்களை தேசிய மகளிர் ஆணையம் கண்டிக்கிறதா?
அக்யூஸ்டு ஞானசேகரன் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் எடுத்த படம்:
- அக்யூஸ்டு அதிமுக பிரமுகரின் உறவுக்காரர் என்பதால் அதிமுக மேல் குற்றம் சொல்கிறார், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள். அப்பொழுது அண்ணா பல்கலைக்கழகம் அக்யூஸ்டு ஞானசேகரன், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு சில நிகழ்ச்சிகளில் கூட இருந்ததாக சொல்லப்படுவதால் மட்டுமே திமுகவிற்கும் குற்றத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
- இந்த நபர் இந்த காரை யாருக்காகவோ சரிசெய்து கொடுப்பதற்காக தன்வசம் வைத்திருந்ததாகச் சொல்கிறார். சரிசெய்து கொடுக்க எடுத்த காரை இவர் தனது பர்ஸனல் யூசுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்? அதுவும் வேலண்டைன்ஸ் டேக்கு கொடைக்கானல் போவதற்கு?
- வேலண்டைன்ஸ் டே பிப்ரவரி 14ஆம் தேதி வருகிறது. சம்பவம் நடந்தது ஜனவரி கடைசி வாரத்தில். கொடைக்கானல் டூருக்காகத் தான் கொடி கட்டினார்கள் என்றால் 15 நாட்கள் முன் ஏன் கட்டவேண்டும்.
- சந்துரு வண்டியை ஓட்டிச்சென்றதாகத் தெரிகிறது. சந்தோஷ் என்பவன் தான் விரட்டச்சொல்லியிருக்கிறான். அவனை கைது செய்தாகிவிட்டதா? அல்லது இந்த சந்துரு மற்ற அனைவருக்கும் பலியாடாகிறானா?என தமிழக காவல் துறையை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார், வினோதினி வைத்யநாதன்.
முன்னதாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காவல் ஆய்வாளர் பாரதியாக நடித்து, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனவர், நடிகை வினோதினி வைத்தியநாதன்.
இவர் கமல்ஹாசன் தலைமை வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்