என் கூட ஜாலியா வாழ்ந்துட்டு விட்டுட்டு போவீங்க.. கர்நாடக நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்வேன் - விஜயலட்சுமி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால், என்னுடைய அனுமதியின்றி, அதை சீமான் கலைத்துவிட்டார். தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோயம்பேடு துணை ஆணையர் உமையாளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதையடுத்து, நேரில் ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், சீமான் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, சீமான் செப்டம்பர் 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவார் என்று அவரது தரப்பினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சீமான் மீது அளித்த புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தெரிவித்தார். அப்போது பேசிய விஜயலட்சுமி, வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்," 2 பெண்களை வைத்து திமுக அரசியல் செய்வதாக சீமான் கூறினார். திமுக என்னை வைத்து அரசியல் செய்தால் எனக்கு நியாயம் பெற்றுக் கொடுத்திருப்பார்கள். இது ஒன்றும் தீர்க்க முடியாத வழக்கு இல்லை.
ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி வரை தமிழ்நாடு போலீசார் சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீமான் கடந்த மார்ச் மாதம் மதுரை செல்வத்தை வைத்து பேசி, கயல்விழிக்கு தெரியாமல் 50 ஆயிரம் கொடுப்பதாக சொன்னார். என்னிடம் இருந்த ஆதாரத்தை எல்லாம் பிடுங்கி கொண்டார்கள். வீடியோக்களை பெற்றுக்கொண்டு என்னை டார்ச்சர் செய்தார் சீமான்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட என் அக்காவை அழைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்து போலீசில் புகார் அளித்தேன். எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்கள். 2011 தேர்தலின் போது அதிமுக சீமானை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு என் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது எம்பி தேர்தல் வருகிறது. நான் யாருக்கும் ஒத்துழைக்க மாட்டேன். சீமானுக்கு பயந்து நாங்கள் தங்குவதற்கு கூட தமிழ்நாட்டில் வீடு கொடுக்கவில்லை. அப்போது எனக்கு கர்நாடகாதான் உதவி செய்தது.
என் அம்மா பிணத்தை வைத்துக்கொண்டு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவித்தேன். அப்போதும் எனக்கு கர்நாடகாதான் உதவியது. கர்நாடகாவில் பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்காக 12 வருடங்களாக தமிழ் மண்ணில் என்னை கதற விடுகிறீர்கள். 12 வருடங்களாக தமிழ்நாடு போலீசார் ஆதாரங்களை வாங்கி வைத்துக்கொண்டு அழித்து விடுகிறார்கள்.
இப்போது என் போனை வாங்கி வைத்துள்ளார்கள். சீமான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சீமான் - விஜயலட்சுமி போரை முடிவுக்கு கொண்டு வர கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறேன்.
இதற்காக யார்க்கிட்டேயும் நான் பிச்சை எடுக்கமாட்டேன். என் பணம் போச்சு, வாழ்க்கை போச்சு என்று யாரிடமும் வந்து நிற்க மாட்டேன். என்னை பார்த்தால் இளிச்ச வாய் போன்று தெரிகிறதா? என் கூட ஜாலியா வாழ்ந்துட்டு கர்நாடகக்காரி என்று விட்டுட்டு போவீங்க, நான் சும்மா விட்டுடுவேனா? கர்நாடக நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடருவேன், உறுதியா சீமானுக்கு அந்த அதிர்ச்சியை கொடுக்பேன். இவ்வாறு நடிகை விஜயலட்சுமி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்