Vijay Politics: ’அதிமுக வேணாம்! விஜய் கட்சியில் விரைவில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்!’ இதோ விவரம்!
”கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்”
தமிழக பாஜகவில் ஆக்டிவாக வலம் வந்த நடிகை காயத்ரி ரகுராம், பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அவர் தன்னை ஓரம் கட்டுவதாக குற்றச்சாட்டு வைத்தார். பின்னர் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் அதிமுகவில் அவர் எதிர்பார்த்த பதவி கிடைக்காததால் நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றி கழகத்தில் காயத்ரி ரகுராம் இணைய எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட ஒருவருக்கு காயத்ரி ரகுராம் பதில் அளித்துள்ளார்.
பல்சஸ்220 என்ற ஐடியில் இருக்கும் நபர், ”கட்சி தாவ தயாராகும் நடிகை காயத்ரி ரகுராம்! சமீபத்தில் அதிமுகவில் இணைந்த காயத்ரி தனக்கு எந்த பதவியும் இப்போதைக்கு தரப்படாது என்ற போதியிலும் அரசியல் அடைக்கலம் தேடி அங்கு இணைந்துள்ளார் நடிகர் விஜய் அவர்கள் ஆரம்பித்த #TVKParty யில் இணைய புஸ்சி ஆனந்த் உடன் பேச்சுவார்த்தை என்ற தகவல்.” என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இந்த விரக்தியடைந்த ஆன்மாவிற்கு நான் வருந்துகிறேன். தீவிர லூசுதனம் எப்போதும் என்னை குறிவைக்கிறது. எப்போதும் இந்த கோமாளி அண்ணாமலையின் டயபர் தூக்கிகள். என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள். நான் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாக பணியாற்றக்கூடிய இடம் அதிமுக. நிர்வாகம் தெரிந்த அ.தி.மு.க.வை மட்டுமே ஆட்சி செய்ய மக்கள் விரும்புவார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அதிமுக மட்டுமே புரிந்து கொண்டுள்ளது. நான் எப்போதும் அ.தி.மு.க மூலம் சேவை செய்வேன் மக்களுக்காக. பதவிக்கு ஒதுக்கப்பட்ட வேலை, நான் அது இல்லாமல் வேலை செய்வேன். 6 நாட்கள் நான் குடும்ப திருமணத்தில் பிஸியாக இருந்தேன். அதுக்காக உங்களுக்கெல்லாம் ஏன் இப்படி குழப்பம். எப்போதும் குழப்பமான பைத்தியக்காரர்கள் அண்ணாமலையின் வார்ரூமில் மட்டுமே இருக்க முடியும்.” என கூறி உள்ளார்.