’38 வருஷமா கண்ணகியா வாழ்ந்துட்டு இருக்கேன்! எந்த மாற்றமும் இல்ல!’ நடிகை குஷ்பு திட்டவட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’38 வருஷமா கண்ணகியா வாழ்ந்துட்டு இருக்கேன்! எந்த மாற்றமும் இல்ல!’ நடிகை குஷ்பு திட்டவட்டம்!

’38 வருஷமா கண்ணகியா வாழ்ந்துட்டு இருக்கேன்! எந்த மாற்றமும் இல்ல!’ நடிகை குஷ்பு திட்டவட்டம்!

Kathiravan V HT Tamil
Jan 03, 2025 03:41 PM IST

நான் கண்ணகிதான். சென்னைக்கு வந்து 38 வருஷம் ஆகுது. 38 வருஷமாக கண்ணியா தான் வாழ்ந்துட்டு இருக்கேன் என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கூறி உள்ளார்.

’38 வருஷமா கண்ணகியா வாழ்ந்துட்டு இருக்கேன்! எந்த மாற்றமும் இல்ல!’ நடிகை குஷ்பு திட்டவட்டம்!
’38 வருஷமா கண்ணகியா வாழ்ந்துட்டு இருக்கேன்! எந்த மாற்றமும் இல்ல!’ நடிகை குஷ்பு திட்டவட்டம்!

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கண்ணகி போல் மதுரைக்கு சென்று பேரணி நடத்த உள்ளீர்களே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். 

கண்ணகியாகவே வாழ்ந்து வருகிறேன்!

அதற்கு பதில் அளித்த குஷ்பு, “ஆமாம். நான் கண்ணகிதான். சென்னைக்கு வந்து 38 வருஷம் ஆகுது. 38 வருஷமாக கண்ணியா தான் வாழ்ந்துட்டு இருக்கேன். மனசுல பட்டத பேசுவன். மனசுல பட்டத செய்வேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. குஷ்பூ சுந்தர் ஆரம்பத்தில் எப்படி இருந்தாலோ, இனைக்கும் அப்படியேதான் இருக்கேன்” என்று கூறினார். 

ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை

தொடர்ந்து பேசிய அவர், 44 ஆயிரம் கோடி கல்வி கொள்கைக்காக பணம் கொடுத்து உள்ளனர். அது எங்கே உள்ளது என அண்ணாமலை கேட்டு உள்ளார். 10 ஆயிரம் பள்ளிகளில் புதிய கட்டிடம் கட்ட உள்ளோம் என்றார்கள். ஆனால் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. 

திமுக மகளிர் அணி எங்கே?

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நடந்த தவறை தட்டிக்கேட்க திமுகவுக்கு தைரியம் இல்லை. சௌமியா அன்புமணியையும் போலீசார் கைது செய்து உள்ளனர். தைரியம் உள்ள பெண்கள் போராடுவதையும் திமுக தடுக்கிறது. கனிமொழி எங்கே?, ஒவ்வொரு விஷயத்திலும் பேசும் அவர், தற்போது எங்கே உள்ளார். திமுகவின் மகளிர் அணி எங்கே உள்ளது. திமுகவில் உள்ள ஒரு பெண் கூட இதுவரை அண்ணா பல்கலைகழக பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது ஏன்?, அவர்கள் எங்கே உள்ளார்கள் என கூறி உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.