TVK Vijay: ’ஆனந்த் கொஞ்சம் வெளிய இருங்க!’ மாவட்ட பொறுப்பாளார்களுடன் தனிமையில் விஜய் ஆலோசனை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tvk Vijay: ’ஆனந்த் கொஞ்சம் வெளிய இருங்க!’ மாவட்ட பொறுப்பாளார்களுடன் தனிமையில் விஜய் ஆலோசனை!

TVK Vijay: ’ஆனந்த் கொஞ்சம் வெளிய இருங்க!’ மாவட்ட பொறுப்பாளார்களுடன் தனிமையில் விஜய் ஆலோசனை!

Kathiravan V HT Tamil
Jan 24, 2025 03:18 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்யும் பணி இறுதி வடிவம் பெற்று உள்ளது.

TVK Vijay: ’ஆனந்த் கொஞ்சம் வெளிய இருங்க!’ மாவட்ட பொறுப்பாளார்களுடன் தனிமையில் விஜய் ஆலோசனை!
TVK Vijay: ’ஆனந்த் கொஞ்சம் வெளிய இருங்க!’ மாவட்ட பொறுப்பாளார்களுடன் தனிமையில் விஜய் ஆலோசனை!

கட்சி கட்டமைப்பை பலப்படுத்தும் விஜய்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்து உள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். 

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்யும் பணி இறுதி வடிவம் பெற்று உள்ளது. 

நிர்வாகிகள் நியமனத்திற்கு பணமா?

இதனிடையே தவெக மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய 15 லட்சம் வரை பணம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. முன்னதாக, விழுப்புரம் நகர தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சம் கேட்பதாக புகார் எழுந்திருந்தது. இதுகுறித்து விழுப்புரம் தவெக வாட்ஸ் ஆப் குரூப்பில் வாட்ஸ் ஆப் சேட் ஒன்று கசிந்துள்ளது. அதில், விழுப்புரம் மாவட்ட தலைவராக இருக்கும் 'குஷி' மோகன் நகர தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயித்தாக குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. 19 அணி தலைவர்களுக்கும் அந்தந்த பதவிக்கு ஏற்ற வகையில் பணம் நிர்ணயம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கட்சி பொறுப்புகளுக்கு பணம் பெறும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் மூலம் விஜய் எச்சரிக்கை விடுத்து இருந்தார். 

விஜய் தனியாக ஆலோசனை!

இந்த நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் உடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், பொருளாளர் உள்ளிட்டோரை வெளியே இருக்க சொல்லிவிட்டு விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.