தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Actor Vija's Tamizhaga Vetri Kazhagam Name Faces Problem

TVK: ரசிகர்கள் அதிர்ச்சி..தவெக கட்சி பெயருக்கு இப்படியும் ஒரு சிக்கல்? - என்ன செய்யப் போகிறார் நடிகர் விஜய்?

Karthikeyan S HT Tamil
Feb 07, 2024 08:59 PM IST

நடிகர் விஜய் அறிவித்துள்ள புதிய கட்சியின் பெயருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பேட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியிருந்தார். அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் விஜய்யின் குறிக்கோள் 2026 சட்டமன்ற தேர்தல் என்பதும் தெளிவாக தெரிகிறது. இதனால் இப்போதே குஷியான ரசிகர்கள், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை ஆங்கிலத்தில் சுருக்கமாக TVK என்று குறிப்பிட்டு வருகின்றனர். இது தொடர்பான ஹேஷ்டேக்குகளும் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது.

இந்த நிலையில், விஜய்யின் கட்சிக்கும் தங்களின் கட்சிக்கும் ஆங்கில சுருக்கெழுத்து பெயர் TVK (டிவிகே) ஒரே மாதிரியாக இருப்பதால் விஜய் கட்சியின் பெயரை மாற்றச் சொல்லி தேர்தல் ஆணையத்தில் கேட்போம்” என சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.

இது தொடர்பாக வேல்முருகன் அளித்துள்ள பேட்டியில், 'அரசியக் கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். சினிமாவில் இருந்து வரக்கூடிய ஒருவரை உடனே முதலமைச்சராக்க வேண்டுமா? என்ற கேள்வியை தமிழக மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில், மக்களுக்குப் பணி செய்ய வேண்டியதற்கான கால அவகாசத்தை அவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் எல்லாம் விஜய்யின் நிலைப்பாடு என்ன என்று நமக்குத் தெரிய வேண்டும். அதன் பிறகே, அவருக்கு வாக்களிப்பது குறித்து மக்கள் முடிவெடுக்க வேண்டும். மற்றபடி அவர் அரசியலுக்கே தகுதி இல்லாதவர் என்று சொல்ல முடியாது. TVK என்ற பெயரை ஏற்கனவே நாங்கள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறோம். நடிகர் விஜய் அந்த பெயரை பயன்படுத்தினால் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என்று அவர் கூறியிருக்கிறார். 

தமிழ வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் பேட்டியால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இதுதொடர்பாக விஜய் தரப்பில் இருந்து ஏதேனும் விளக்கம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஸ்பெயினில் அரசுமுறை பயணத்தை முடித்துவிட்டு இன்று (பிப்.07) சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel