BJP Sarath kumar: பாஜக உடன் இணைந்தது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி! பாஜகவில் சேர்ந்தார் சரத்குமார்!
”Samathuva Makkal Katchi: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக உடன் சரத்குமார் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தனது கட்சியை பாஜகவில் இணைப்பதாக சரத் குமார் அறிவித்துள்ளா”
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத் குமார் அறிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தனது கட்சியை பாஜக உடன் சமத்துவ மக்கள் கட்சியை சரத் குமார் இணைத்துள்ளார். கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைகளை கேட்ட பிறகே இந்த முடிவை எடுத்துள்ளதாக சரத்குமார் கூறி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக உடன் சரத்குமார் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தனது கட்சியை பாஜகவில் இணைப்பதாக சரத் குமார் அறிவித்துள்ளார்.
சஞ்சலத்தில் இருந்தேன்!
இது தொடர்பாக பேசிய அவர், சஞ்சலத்தில் இருந்த நான் ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதும் எத்தனை சீட், யாருடன் கூட்டணி என கேட்பார்கள். இந்த கேள்வி என் மனதை பாதித்தது. மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கை அடிப்பட்டு விடுகிறதே என்ற வருத்தம் எனக்கு இருந்தது.
மோடிஜி உடன் சேர்ந்து செயல்பட விரும்பினேன்!
மோடி ஜி அவர்களுக்கு அர்பணித்து சேர்ந்து செயல்பட்டால் என்ன என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக என் மனைவி உடன் பேசினேன். அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார். கட்சி நிர்வாகிகளிடம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது குறித்து பேசிய போது, அதற்கு அவர்கள் ஆதரவும் தெரிவித்தனர்.
காமராஜர் ஆட்சியை மோடி கொடுக்கிறார்!
மக்கள் பணியில் நாம் தொடர்கிறோம்; இது ஒரு எழுச்சியின் தொடக்கம். சாதரண குடும்பத்தில் பிறந்த மோடி ஜி அவர்கள் உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை தரும் தலைவராக மோடி ஜி உள்ளார். நமது இயக்கம் மீண்டும் தேர்தலை சந்தித்துக் கொண்டே சந்திப்பதற்கு பதிலாக ஏன் நமது சக்தியை மற்றொரு சக்தி உடன் இணைத்து செயல்பட்டால் என்ன என்ற கேள்வி எழுந்த பிறகு அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என சரத்குமார் கூறி உள்ளார்.
நாட்டாமை அண்ணன்! - அண்ணாமலை புகழாரம்!
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசுகையில், அற்புதமான மனிதர் நம்முடைய நாட்டாமை அண்ணன். சினிமா துறையில் கால்பதித்துள்ளார். தென் இந்தியா முழுவதும் ஒரு மனிதன் நடிகராக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்றால் அது சரத்குமார் தான்.
சமத்துவ மக்கள் கட்சி அறிக்கை எனக்கு பிடிக்கும்!
சமுதாயத்தின் மீது உள்ள ஆழ்ந்த காதலில் அரசியலுக்கு வந்து தனித்தன்மையோடு சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்தார். அவரது கட்சி அறிக்கையை நான் எப்போதும் விரும்பி படிப்பேன்.
அண்ணனிடம் பேசும்போது மற்ற அரசியல் கட்சி தலைவரை போல் தெரியவில்லை; மற்றவர்கள் பேரம் பேசுவார்கள், எனக்கு என்ன லாபம், உங்களுக்கு என்ன லாபம் என கேட்பார்கள். ஆனால் இவர் ‘நான் கட்சிக்கு வந்தால் நாட்டுக்கும், மோடிக்கும் என்ன லாபம்’ என்றுதான் கேட்டார்.
நள்ளிரவில் என்னிடம் பேசினார்!
நேற்று நள்ளிரவில் என் தொலைபேசியில் அழைத்த அவர், ’நானும் மற்ற அரசியல்வாதியை போல் இருக்க கூடாது. துணிவோடு, அன்போடு நான் முடிவு எடுத்துள்ளேன். காலையில் நான் கட்சி நிர்வாகிகளிடம் இதை சொல்ல வேண்டும். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை மோடி அவர்களுடன் இணைத்து 2024 தேர்தலுக்காக பாடுபடபோகிறேன்’ என்று சொன்னார்கள் என அண்ணாமலை பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9