முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேச முக்கிய காரணம் என்ன?.. வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த ரஜினிகாந்த்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேச முக்கிய காரணம் என்ன?.. வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த ரஜினிகாந்த்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேச முக்கிய காரணம் என்ன?.. வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த ரஜினிகாந்த்!

Karthikeyan S HT Tamil
Published Apr 09, 2025 12:22 PM IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது ஏன் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக பேசிய ஏன்?.. திடீரென வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த ரஜினிகாந்த்!
ஜெயலலிதாவுக்கு எதிராக பேசிய ஏன்?.. திடீரென வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த ரஜினிகாந்த்!

ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய ஜெயலலிதா

‘பாட்ஷா’ திரைப்பட 100 நாள் விழா நடைபெற்ற மேடையில் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை வைத்துக்கொண்டே வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசிவிட்டேன். அமைச்சராக இருந்த அவரை வைத்துக்கொண்டே நான் பேசியிருக்கக் கூடாது. ஆனால், அன்றைய சூழலில் தெளிவு இல்லாமல் பேசிவிட்டேன். இதனால் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கிவிட்டார்.

இது தெரிந்தவுடன் என்னால் இப்படி நடந்துவிட்டதே என்று எண்ணி எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. உடனே ஆர்.எம்.வீரப்பனை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன். ஆனால், அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது ஏன்?

மதிப்புக்குரிய ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால் கூட.. இந்த காரணம் முக்கியமானது. அதன் பிறகு, ஆர்.எம்.வீரப்பனிடம் நான் வந்து ஜெயலலிதாவிடம் பேசுகிறேன் என்றேன். ஆனால், ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துவிட்டார். நீங்கள் சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துவிட்டார். இவர் தான் ரியல் கிங் மேக்கர்." எனத் தெரிவித்துள்ளார்.

'ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்'

முன்னதாக, மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று 'ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்' என்ற ஆவணப் படம் தொடர்பாக வீடியோ காட்சி வெளியிட்ப்பட்டது. இந்த வீடியோ காட்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளை பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.