தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Actor Mansoor Ali Khan Said That He Will Contest Even If He Is Given A Lap

Actor Mansoor Ali Khan: ’மடிப்பிச்சை எடுத்தாவது போட்டியிடுவேன்' - நடிகர் மன்சூர் அலிகான்

Marimuthu M HT Tamil
Feb 25, 2024 11:27 AM IST

மடிப்பிச்சை எடுத்தாவது போட்டியிடுவேன் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் (கோப்புப்படம்)
நடிகர் மன்சூர் அலிகான் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இக்கட்சியின் முதல் மாநாடு - கட்சி அறிமுகக் கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, ‘தமிழ்த்தேசிய புலிகள்’ என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த நடிகர் மன்சூர் அலிகான், தற்போது கட்சியின் பெயரை, டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்று மாற்றியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தனது கட்சியில் 15ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றும்; தமது கட்சி மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தமிழர் நலனில் அக்கறைகொண்டு செயல்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அறிமுகக் கூட்டத்தில் பேசிய மன்சூர் அலிகான் கூறியுள்ளதாவது, ''நடிகராக நான் கட்சி தொடங்கவில்லை. நடிப்பதற்கு வரும் முன்பே மக்களுக்காக நான் போராடி இருக்கின்றேன். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மடிப்பிச்சை எடுத்தாவது போட்டியிடுவேன்’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து எளியவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதே தங்களின் நோக்கம் என்றும்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை தங்களது கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டு தெரிவிப்போம் என்றும் தெரித்தார். மேலும், அவர் தமிழக மீனவர்களை இலங்கை துன்புறுத்துகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தனது கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

IPL_Entry_Point

டாபிக்ஸ்