தலைப்பு செய்திகள்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை முதல் காவிரியில் வெள்ளம் வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை முதல் காவிரியில் வெள்ளம் வரை!

தலைப்பு செய்திகள்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை முதல் காவிரியில் வெள்ளம் வரை!

Kathiravan V HT Tamil
Published Jun 26, 2025 07:44 AM IST

போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை, திராவிட மாடல் ஆட்சி குறித்து ஸ்டாலின் விளக்கம், ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட ஈபிஎஸ் கோரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை முதல் காவிரியில் வெள்ளம் வரை!
தலைப்பு செய்திகள்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை முதல் காவிரியில் வெள்ளம் வரை!

1.கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 71,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

2.எல்லோருக்கும் எல்லாம்

தமிழ்நாடு முதலமைச்சர், “எல்லோருக்கும் எல்லாமென, எல்லோரது மனங்களிலும் மகிழ்ச்சியைத் தருவதே திராவிட மாடல் ஆட்சி” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். கலைஞர் கனவு இல்ல திட்டப் பயனாளிகளின் நிகழ்ச்சி வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார்.

3.ரயில் கட்டண உயர்வை கைவிடுக-ஈபிஎஸ்

ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்று எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். ரயில் கட்டண உயர்வை உடனே கைவிடும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

4.கிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீஸ் விசாரணை நடைபெற்றது. ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கைது நடவடிக்கைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.மழை நிலவரம்

குமரி, மதுரை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியில் 50 ஏக்கர் விளைநிலத்தில் மழைநீர் தேங்கியதால் நாற்றுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

6.கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இரண்டாவது நாளாகப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் தீவிரவாதிகள் போல ஊடுருவிய  63 பேர் பிடிக்கப்பட்டனர்.

7.அமாவாசை ஊஞ்சல் உற்சவம் 

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு **ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் அலைஅலையாய் பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.

8.முசிரி அருகே பாறை விபத்து

முசிரி அருகே பாறைகள் அந்தரத்தில் பறந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாறைகளை வெடிவைத்து அகற்றியபோது இந்த விபரீதம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.சென்னை குடிநீர் ஆதாரம்

சென்னை மாநகரின் எதிர்காலக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய நீர் ஆதாரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 704 பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

10.கள்ள நோட்டு 

கிருஷ்ணகிரி அருகே வெள்ளை காகிதங்கள் பணமாக மாறும் என்று கூறி மோசடி செய்த, கள்ள நோட்டு தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டு 7 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்.