Kanja Karuppu: 'டாக்டர் எங்கே? உடனே வரனும்!’ அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பவம் செய்த நடிகர் கஞ்சா கருப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kanja Karuppu: 'டாக்டர் எங்கே? உடனே வரனும்!’ அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பவம் செய்த நடிகர் கஞ்சா கருப்பு!

Kanja Karuppu: 'டாக்டர் எங்கே? உடனே வரனும்!’ அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பவம் செய்த நடிகர் கஞ்சா கருப்பு!

Kathiravan V HT Tamil
Published Feb 11, 2025 01:16 PM IST

காலை 8 மணி முதல் பொதுமக்கள் காத்து இருக்கின்றனர். மருத்துவரின் பெயரையோ அல்லது மருத்துவரின் தொலைபேசி எண்ணையோ தர மறுக்கின்றனர். மதுரை சிறப்பாக மருத்துவர்கள் செயல்படுகின்றனர். ஆனால் சென்னையில் மருத்துவர் சரியாக கவனிப்பது இல்லை.

Kanja Karuppu: டாக்டர் எங்கே? அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பவம் செய்த நடிகர் கஞ்சா கருப்பு!
Kanja Karuppu: டாக்டர் எங்கே? அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பவம் செய்த நடிகர் கஞ்சா கருப்பு!

இது தொடர்பாக அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் உடன்நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில், காலை 8 மணி முதல் பொதுமக்கள் காத்து இருக்கின்றனர். மருத்துவரின் பெயரையோ அல்லது மருத்துவரின் தொலைபேசி எண்ணையோ தர மறுக்கின்றனர். மதுரை சிறப்பாக மருத்துவர்கள் செயல்படுகின்றனர். ஆனால் சென்னையில் மருத்துவர் சரியாக கவனிப்பது இல்லை. இங்கு மருத்துவமனையில் ஏசி, பேன் உள்ளிட்டவை ஓடிக் கொண்டு இருக்கிறது. ஏராளமான மக்கள் காத்து இருக்கின்றனர். ஆனால் இன்னும் மருத்துவர் வராமல் அவதியுற்று வருகின்றனர் என கஞ்சா கருப்பு கூறி உள்ளார். 

மேலும் படிக்க: 7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? அண்ணாமலை சரமாரி கேள்வி!

மேலும் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் அளித்த நடிகர் கஞ்சா கருப்பு கூறுகையில், எனக்கு கால்வலி என்பதால் ஊசி போட மருத்துவமனைக்கு சென்று இருந்தேன். 8 மணிக்கு வரும் மருத்துவர் தனி கிளினிக் வைத்து உள்ளதால் மதியம் 3 மணிக்கு வருவார் என்று சொல்கிறார்கள். இதை பற்றி மீடியாவில் சொல்லாதீர்கள் என்று கூறுகிறார்கள். ஒருவர் மண்டை உடைந்து ரத்தம் வருகிறது. நாய் கடித்து ஒருவர் சிகிச்சைகாக வந்து உள்ளார். ஆனால் அங்கு மருத்துவரே இல்லை. டாக்டர் பெயரை கேட்டாலே சொல்ல மறுக்கிறார்கள். 200 பேர் காத்து இருக்கிறார்கள். ஆனால் சிகிச்சை அளிக்க மருத்துவர்களே இல்லை என தெரிவித்து உள்ளார். 

மேலும் படிக்க: ’பொங்கல் வேட்டி சேலை திட்டத்தில் இதுதான் நடந்தது!’ அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி!

சென்னை மாநகராட்சி துணை மேயர் விளக்கம்

நடிகர் கஞ்சா கருப்புவின் குற்றச்சாட்டு மற்றும் புகார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு கடும் பணி சுமை உள்ளது. இன்று தைப்பூச விடுமுறை நாள் என்பதால் மாற்று பணிக்கு வர வேண்டிய மருத்துவர் யாராவது வர காலதாமதம் ஆகி இருக்கலாம். துறையின் அதிகாரிகள் உடன் தொடர்பு கொண்டு பிரச்னையை தீர்க்க ஆவண செய்கிறேன். இதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன் என தெரிவித்து உள்ளார். 

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.