‘சீசெல் உணவகம் எனக்கு சொந்தமானது இல்லை’ நடிகர் ஆர்யா விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘சீசெல் உணவகம் எனக்கு சொந்தமானது இல்லை’ நடிகர் ஆர்யா விளக்கம்!

‘சீசெல் உணவகம் எனக்கு சொந்தமானது இல்லை’ நடிகர் ஆர்யா விளக்கம்!

Kathiravan V HT Tamil
Published Jun 18, 2025 12:15 PM IST

”கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல உணவகச் சங்கிலியான சீசெல் உணவகங்களுடன் தொடர்புடையதாக இந்த சோதனை”

‘சீசெல் உணவகம் எனக்கு சொந்தமானது இல்லை’ நடிகர் ஆர்யா விளக்கம்!
‘சீசெல் உணவகம் எனக்கு சொந்தமானது இல்லை’ நடிகர் ஆர்யா விளக்கம்!

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சீசெல் உணவகத்தில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல உணவகச் சங்கிலியான சீசெல் உணவகங்களுடன் தொடர்புடையதாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, காண்டாஞ்சாவடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சீசெல் கிளைகளிலும் வருமானவரி துறை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆர்யாவின் விளக்கம்

இந்த நிலையில் சீசெல் உணவகத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என நடிகர் ஆர்யா விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சீசெல் உணவகத்தை கடந்த காலங்களில், சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை தான் நடத்தி வந்ததாகவும், தற்போது அது தனது உரிமையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த உணவகத்துடன் தனக்கு தற்போது எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். 

சோதனையின் பின்னணி

சென்னையில் உள்ள சீசெல் உணவகக் கிளைகளில் இன்று காலை வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள சீசெல் கிளைகளில் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இந்த உணவகம் ஆர்யாவுக்கு சொந்தமானது என பரவலாக கருதப்பட்டதால், அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடந்த சோதனை குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், ஆர்யாவின் மறுப்பு இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.