MGR Birthday: எம்ஜிஆர் பிறந்தநாள் பேனரில் நடிகர் அரவிந்த்சாமி .. சலசலப்பை ஏற்படுத்திய அதிமுக பேனர்!-actor aravind swamy picture appears in mgr birthday banner in tirupathur - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mgr Birthday: எம்ஜிஆர் பிறந்தநாள் பேனரில் நடிகர் அரவிந்த்சாமி .. சலசலப்பை ஏற்படுத்திய அதிமுக பேனர்!

MGR Birthday: எம்ஜிஆர் பிறந்தநாள் பேனரில் நடிகர் அரவிந்த்சாமி .. சலசலப்பை ஏற்படுத்திய அதிமுக பேனர்!

Karthikeyan S HT Tamil
Jan 17, 2024 02:09 PM IST

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரில் நடிகர் அரவிந்த்சாமி புகைப்படம் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்ஜிஆர் பிறந்தநாள் வாழ்த்து பேனர், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர்.
எம்ஜிஆர் பிறந்தநாள் வாழ்த்து பேனர், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார். அதிமுக அலுவலகத்தில் கட்சி கொடியையும் அவர் ஏற்றி வைத்தார்.

மேலும், எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் பகுதியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வைத்துள்ள பேனரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியினரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், எம்.ஜி.ஆர் புகைப்படம் மட்டும் அந்த பேனரில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக எம்.ஜி.ஆர் வேடத்தில் 'தலைவி' என்ற படத்தில் நடித்திருந்த நடிகர் அரவிந்த சாமியின் புகைப்படம் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும், 'சத்துணவு கண்ட சரித்திர நாயகன், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாள் விழா' என்றும் எழுதப்பட்டு, ஒரு ஓரத்தில் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர் புகைப்படம் மிக சிறிய அளவில் மட்டுமே இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரவிந்த் சாமியின் புகைப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இன்று எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாளா? அல்லது நடிகர் அரவிந்த சாமிக்கு பிறந்த நாளா? என பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த பேனரில் இருந்த அரவிந்த் சாமி படத்தின் மீது எம்.ஜி.ஆரின் போஸ்டரை ஒட்டி தற்போது மறைத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.